கூடுதல் கட்டிடங்கள்: அமைச்சர் ஆய்வு

கூடுதல் கட்டிடங்கள்: அமைச்சர் ஆய்வு

மதுரை, ஜூலை. 19.

மதுரை மாவட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கூடுதல் கட்டடங்கள் கட்டும் பணியை,
வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும்
தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர்
.ஆர்.பி.உதயகுமார்
ஆய்வு செய்தார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.டி.ஜி.வினய்
தலைமையில்,
பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவிக்கையில்:

தமிழகத்தில் இன்று கோவிட்-19 கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர்
எடுத்து வருகிறார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தளர்வின்றி முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு மக்களின் ஒத்துழைப்போடு நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் ,மதுரையில் தளர்வின்றி நடைபெறும் முழு ஊரடங்கில் மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குகிறார்கள். தேவையான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள் அதிகமாக கூடக்கூடிய பகுதியான காய்கறி மார்க்கெட்,
மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்,
பூ மார்க்கெட்,
நெல் வணிக வளாகம்
மீன் மார்க்கெட்,
பரவை மொத்த மற்றும் சில்லரை காய்கறி மார்க்கெட் ஆகிய இடங்களில் அதிகமாக கூடாமல் இருப்பதற்காக வரைமுறைப்படுத்தி நேரக்கட்டுப்பாட்டை மார்க்கெட் சங்க உறுப்பினர்கள் தாமாக முன்வந்து செயல்படுத்தினர்.
சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கு ஒரு புதிய அணுகுமுறையை பூ மார்க்கெட்டில் மாவட்ட ஆட்சித்தலைவர்
அறிவுரையின்படி ,அதற்கான உபகரணங்களை தயார் செய்து வைத்திருக்கிறார்கள். அதை பரிசார்த்த முறையிலே பயன்படுத்தப்படுகிறது. அது நல்ல பலனை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரை மாவட்டத்தில் மாநகராட்சி பகுதியில் வீதி வீதியாக மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. மூன்று வாரங்களுக்கு முன் 5 சதவீதமாக இருந்த நோய்த்தொற்று 20 சதவீதம் வரை உயர்ந்தது. தீவிர நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டதன் காரணமாகவும்ää முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஆரம்ப நிலையிலே நோய்த்தொற்றை கண்டறிய மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதன் காரணமாகவும் 7 சதவீதத்திற்கும் குறைவாக நோய்த்தொற்று எண்ணிக்கை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அனைத்து பணிகளும் 24 மணிநேரமும் செயல்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: