கிணற்றுக்குள் தவறி விழுந்த அஞ்சலக ஊழியர் பலி

கிணற்றுக்குள் விழுந்த அஞ்சலக ஊழியர் பலி

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம், பாலமேட்டில் கிணற்றில் விழுந்த அஞ்சலக ஊழியர் அடிபட்டு இறந்தார்.
பாலமேடைச் சேர்ந்தவர் மூக்கையா. இவரது மகன் பார்த்தசாரதி வயது 52. இவர் , ஊரில் தனது தோட்டத்து கிணற்று அருகே அமர்ந்திருந்தராம்.
அப்போது தலைசுற்றல் ஏற்பட்டு, கிணற்றுக்குள் தவறி விழுந்தாராம்.
அடிபட்டு அங்கையே இறந்து விட்டாராம்.
அலங்காநல்லூர் தீயணைப்புத் துறையினர் வந்து சடலத்தை மீட்டுள்ளனர்.
இது குறித்து பாலமேடு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: