காவல் ஆய்வாளரின் மனித நேயம்

பார்வையற்றோர் மாற்றுத்திறனாளி ஆதரவற்றோர் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஹார்லிக்ஸ் பாட்டில் வழங்கிய பெண் காவல் ஆய்வாளர்: தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை இரவு பகல் பாராது செய்துவரும் பெண் காவல் ஆய்வாளர் குவியும் பாராட்டுக்கள்

மதுரை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சுப்ரமணியபுரம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் கலைவாணி. தினசரி அவர்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியான.. முத்துப்பட்டி பார்வையற்றோர் இல்லம் சென்று அங்குள்ள பார்வையற்றவர்களுக்கு ஹார்லிக்ஸ் பாட்டில் வழங்கினார்

இதனைத்தொடர்ந்து,
மாற்றுத்திறனாளிகள் இல்லங்களுக்கு சென்றும் மற்றும் மிகவும் ஏழ்மையான அப்பகுதியில் வாழும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் ஹார்லிக்ஸ் பாட்டில் வழங்கி உதவி செய்தார்.
மேலும் ,இவரது காவல் எல்லைக்குட்பட்ட இவர் தினசரி ஒவ்வொரு பகுதியாக தேர்ந்தெடுத்து மிகவும் எளிமையான வாழும் குடும்பங்களுக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களையும் வழங்கி வருகிறார் காவல் ஆய்வாளரின் உதவிகளைக் செய்துவருவதை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகிறார்கள் .
மேலும் ,இந்த உதவிய நான் எந்த நேரமும் என்னை அழைக்கலாம் எனவும் அப்பகுதி மக்களிடையே தெரிவித்துள்ளார்….

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: