கொரோனா தொற்று: மதுரை பல்கலை. மூடல்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டதை அடுத்து பல்கலைக்கழகம் 3 நாட்கள் முழு விடுமுறை அறிவித்து சுற்றறிக்கை

மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் ஜூன் 24ஆம் தேதி முதல் ஜூலை 14ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஜூலை 15ஆம் தேதி முதல் முழு அரங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடித்த போதிலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 33 சதவீத அலுவலர் ஆசிரியர் வைத்து பல்கலைக்கழக வேலைகள் நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணி புரிந்து வந்த தொலைதூரக் கல்வி அலுவலர் ஒருவருக்கு இன்று கொரோனா நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனால் ஜூலை 17ம் தேதி முதல் ஜூலை 20 ஆம் தேதி வரை பல்கலைக்கழகத்திற்கு முழு விடுமுறை என்ற அறிவிப்பினை பதிவாளர் வசந்தா (பொறுப்பு) சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் முதல்முறையாக கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொலைதூர கல்வி அலுவலர் உடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தொலைதூர கல்வி அலுவலக கட்டிடம் முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட உள்ளதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: