மதுரை
மதுரை அருகே அரசு மதுபானக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்த ஊழியர் கொரோனவால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். அவரது குடும்பத்துக்கு ரூ. 50 லட்சமும், அவர் மனைவிக்கு அரசு வேலை வழங்கக் கோரி, டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மனுவில் கூறப்பட்டுள்ளாதாவது:
மதுரை அருகே சிட்டம்பட்டி டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்தவர் வேல்முருகன் 42. இவர் பணியிலிருக்கும் போது கொரோனா தொற்று ஏற்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், அவர் இறந்து விட்டாராம்.
ஆகவே, வேல்முருகன் குடும்பத்துக்கு, தமிழக முதல்வர் ரூ. 50 லட்சமும், அவரது மனைவிக்கு அரசுப் பணியும் வழங்கிட வேண்டுமென, மதுரை மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கோரியுள்ளனர்.
