மூதாட்டியிடம் நகை கொள்ளை

மதுரையில் அதிகாலையில் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 15 பவுன் நகை கொள்ளை மர்ம போலீசார் தேடி வருகின்றனர்*

மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா ஹார்விபட்டியை சேர்ந்த வெங்கடேசன் அவரது மனைவி முத்துமாரி (45) வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலை 2 மணி அளவில் பின்வாசல் மூலம் வந்து மர்ம நபர்கள் கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்துச் சென்றனர்.

பின்னர் பீரோவில் இருந்த 8 பவுன் நகையையும் ஐந்தாயிரம் ரொக்கத்தையும் எடுத்து சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து.

திருநகர் பகுதியில் போலீனசார் வழக்கு பதிவு செய்து 15 பவுன் நகையை கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகிறது.

அதிகாலையில் நடந்த இந்த நகை கொள்ளை சம்பவத்தால் ஹார்விபட்டி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது…

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: