திமுக எம்எல்ஏ ரேசன் கடைகளில் ஆய்வு

ரேஷன் கடைகளில் மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு :திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்தார்

மதுரை. ஜூலை, 17.

மத்திய தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் தனது ,
தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரேஷன் கடைகளில் ஆய்வு செய்ததோடு ,
பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார்.
அவர்,
ஏஏ ரோடு ஆரப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பாண்டியன் கூட்டுறவு சிறப்பங்காடி ,எஸ்.எஸ் காலனி ஜானகி நாராயணன் தெருவில் அமைந்துள்ள பாண்டியன் கூட்டுறவு சிறப்பங்காடி ,வார்டு எண் 84 தானப்ப முதலி தெருவில் அமைந்துள்ள மதுரை மாநகராட்சி துப்புரவு பணியாளர் பண்டக சாலை ஆகிய கடைகளில் ஆய்வு செய்தார்.
பின்னர் ,தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து திட்டப்பணிகளை தொடங்கி வைத்த அவர் 71 வது திட்டப்பணியாக காலை மணிக்கு வார்டு 86 கிரைம் பிரான்ச் பகுதியில் 8.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தையும்
72 வது திட்டப்பணி யாக வார்டு 78 மேல வாசல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அங்கன் வாடி சுற்றுச்சுவரையும் .
73 வது திட்டப்பணியாக வார்டு 77 ஜெ.ஆர் ரோடு பகுதியில் 4.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல்,
74 வது திட்டப்பணியாக வார்டு 77 இராமலிங்க நகர் 4.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல் ஆகியவற்றை திறந்து வைத்தார் .

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: