டாஸ்மாக் கடைகளை அடைக்கக் கோரி கடையடைப்பு
அலங்காநல்லூர். ஜூலை, 17.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் செயல்படும் அரசு மதுபானக்கடைகளை மூட வலியுறுத்தி வெள்ளிக்கிழமை கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
அலங்காநல்லூர் கேட்டுக் கடையில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடைகளுக்கு, வெளியூர்கள் அதிகம் வருவதாகவும், இதனால் தொற்று நோய்கள் வரலாம் எனக் கோரி, மதுபானக் கடைகளை மூடக்கோரி கிராம மக்கள், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதையடுத்து, கிராம கமிட்டிகள், வியாபாரிகள் முடிவு எடுத்து, அலங்காநல்லூரில் கடையடைப்பு நடைபெற்றது.
இதனிடையே, வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் பிரநிதிகளுக்கும், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியரிடையே சமரச கூட்டம் நடைபெற்றது.இதில் சோழவந்தான் எம்.எல்.ஏ. மாணிக்கம், சமயநல்லூர் போலீஸ் டிஎஸ்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், வருகிற ஆக. 11.தேதிக்குள் அலங்காநல்லூர் பேரூராட்சி எல்லையை விட்டு, மதுபானக் கடைகளை அரசு அதிகாரிகள் ஒத்துக் கொண்டனர்.
இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.