அம்மா கிச்சன் ஆய்வு

மதுரையில் உணவுக் கூடங்களில் ஆய்வு:

மதுரை, ஜூலை, 17.

மதுரை மாவட்டம்
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் மற்றும்
அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் மூலம் தனிமைப்படுத்தப்படும் மையங்களுக்கு உணவு தயார் செய்யப்படுவதை
வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர்
.ஆர்.பி.உதயகுமார்
முன்னிலையில் ,மதுரை மாவட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கை கணிப்பாய்வு அலுவலர் ஃ பிற்படுத்தப்பட்டோர் நலன்ää சீர்மரபினர் நலன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர்
சிறுபான்மையினர் நலத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன்
பார்வையிட்டார்.

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கக் கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் மற்றும் அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் மூலம் தனிமைப்படுத்தப்படும் மையங்களில் உள்ளவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்குவதற்காக உணவு தயார் செய்யப்படுவதை ,
பார்வையிட்டு பேசும்போது தெரிவிக்கையில்:
மதுரை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக செயல்பட்ட அனைத்து நடவடிக்கைகளால் கொரோனா வைரஸ் பாசிட்டிவ் ஆரம்ப கட்டத்தில் 3 லிருந்து 4 சதவீதம் இருந்தது. சில வாரங்களுக்கு பிறகு 18 முதல் 19 சதவீதம் வரை அதிகரித்தது. ஊரடங்கு காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக 7 முதல் 8 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதன் முக்கிய நோக்கம் குணமடையும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிரித்துள்ளது. பரிசோதனையை அதிகப்படுத்தி எந்த நபருக்கு நோய்த் தொற்று இருக்கிறதோ அவர்களை உடனுக்குடன் கண்டறிந்து காய்ச்சல் மருத்துவமனைக்கு அனுப்பி கோவிட் பரிசோதனைக்காக மாதிரி எடுத்து அவர்களை தனிமைப்படுத்தப்படுகிறது. மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் மருத்துவ பரிசோதனை முகாம்களும்
நடமாடும் பரிசோதனை முகாம்களும் நடைபெற்று வருகிறது.
எந்த இடங்களில் அதிகமான பாதிப்பு இருக்கிறதோ அங்கு நடமாடும் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது.
இதனால் அதிகமான நபர்களுக்கு பரிசோதனை செய்வதால் நோய்த் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து குணப்படுத்துவதால் நோயாளிகள் எண்ணிக்கை குறைகிறது.

மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் இருப்பதால் உயிரை காப்பாதற்கு உதவியாக இருக்கிறது. அரசு இராஜாஜி மருத்துவனையில் நல்லமுறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால்,
தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகள் இருந்தாலும் வென்டிலேட்டர் தேவை மிகவும் குறைந்துள்ளது. 600 படுக்கைகளில் ஆக்ஸிஜன் வசதி இருப்பதாலும்
சிகிச்சைகாக உலக தரத்தில் மருத்துவ நெறிமுறைகள் கடைபிடிப்பதாலும் அரசு மருத்துவமனையில் வசதிகள் மேம்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் நோயாளிகள் விரைவில் குணமடைகிறார்கள்.

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே ,நீங்கள் உங்களை பாதுகாப்பதற்காக எந்த நேரமும் முகக்கவசம் அணிவது,
சமூக இடைவெளியை கடைபிடிப்பது,
அடிக்கடி கைகளை கழுவுவது ஆகியவற்றை தவறாமல் செய்தால் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும். கொரோனா வைரஸ் நோய் அறிகுறி வந்த 24 மணி நேரத்தில் அரசு மருத்துவனை அல்லது காய்ச்சல் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். இதனால் நோய்த்தொற்று வருவதையும்ää பரவுவதையும் தடுக்கலாம்.

வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவ நெறிமுறைகளின்படி மருத்துவரின் ஆலோசனையின் படி மிதமான பாதிப்பு உள்ளவர்கள் அவர்களுக்கு தனி அறை,
கழிப்பறை,
உதவி செய்ய உதவியாளர் ஆகிய வசதி இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
அவர்களை தினமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நோயின் தன்மைக்கேற்ப டெலிமெடிசன் வழங்கப்படுகிறது. முதியவர்கள்,
கட்டுப்படுத்த முடியாத பிறநோய்த் தொற்று உள்ளவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கை கணிப்பாய்வு அலுவலர் ஃ பிற்படுத்தப்பட்டோர் நலன்
சீர்மரபினர் நலன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர்
சிறுபான்மையினர் நலத்துறை அரசு முதன்மை செயலாளர்
மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.டி.ஜி.வினய்
தலைமையில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர்
கே.மாணிக்கம்
முன்னிலையில் அலங்காநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள சளிபரிசோதனை மையம்,
காய்ச்சல் வார்டு,
கர்ப்பிணிப் பெண்கள் பரிசோதனை மையம் ஆகியவற்றை பார்வையிட்ட பின்பு , நாவல் பழக்கன்றை நட்டார்.

மாவட்ட ஆட்சித்தலைவர
தலைமையில் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் கோவில்பாப்பாக்குடி ஊராட்சியில் உள்ள பொன்னழகர் மஹாலில் நடைபெற்றுவரும் கொரோனா வைரஸ் காய்ச்சல் மருத்துவ பரிசோதனை முகாமினையும்,
திருப்பரங்குன்றம் அரசு மருத்துவனையில் 40 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டினையும் பார்வையிட்டார்.

இந்த நிகழ்வின்போது ,மதுரை மாநகராட்சி ஆணையாளர்
எஸ்.விசாகன்,
கூடுதல் ஆட்சியர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை)
பிரியங்கா பங்கஜம்
மதுரை மாவட்ட கொரோனா சிகிச்சை சிறப்பு அலுவலர் மரு.குழந்தைசாமி
மாவட்ட வருவாய் அலுவலர் திரு.எஸ்.செல்வராஜ்
துணை இயக்குநர்(சுகாதாரம்) மரு.பிரியா ராஜ்
உதவி இயக்குநர்(பஞ்சாயத்து) திரு.
செல்லதுரை
ஊரகவளர்ச்சி செயற்பொறியாளர்
.இந்துமதி அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: