மூத்த பத்திரிகையாளர் பெ.ராஜன் மறைவு பேரி ழப்பு

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள கோடைநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள்- சர்க்கரையம்மாள் தம்பதியினரின் மகன் பெ.ராஜன்(வயது 64).

இவர் பத்திரிகையாளராக வாழ்க்கையை தொடங்கி இறுதி மூச்சு உள்ளவரை பத்திரிகையாளராக வாழ்ந்தவர்.இவரது பத்திரிகையுலக பணி போற்றுதலுக்குரியது.

இவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நாளிதழ்களில் பணிபுரிந்துள்ளார்.

டாக்டர் நமது எம்.ஜி.ஆர், மக்கள்குரல் நாளிதழ்களிலும், சென்னையில் தமிழ்ச்சுடர் நாளிதழிலும், பல்வேறு வார இதழ்களிலும் பணியாற்றியுள்ளார். தற்போது கடைசியாக Evening Tamilnadu(English evening daily) நாளிதழில் பணியாற்றி வந்தார்.

தமிழக சபாநாயகராக பணியாற்றிய டாக்டர் காளிமுத்துவிடம் பி.ஏ வாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு நேற்று இரவு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால்,வழியிலேயே காலமானார்.

இவருக்கு முருகேசுவரி என்ற மனைவியும், அஞ்சலி,சுருதி,மலர் ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். இவர்களில் 2 மகள்களுக்கு திருமணமாகி விட்டது.

சென்னை மேற்குதாம்பரம் இரும்புலியூரில் பெருமாள் கோவில் தெரு எண் 6-ல் வசித்து வந்தார். அன்னாரது உடல் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மாலை 3 மணிக்கு இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: