சஷ்டி கவசத்துக்கு இழிவு: சாது மிரண்டால் காடு கொள்ளாது!

தேவராய சுவாமிகள் அருளிய, ‘கந்தர் சஷ்டி கவசம்’ குறித்து, ‘யு டியூப்’ சமூக வலைதளத்தில் இழிவாக பேசியவர், ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்பது புரிந்து, மன்னிப்பு கேட்க வேண்டும்’ என, தமிழக தர்மரக்சன சமிதி தலைவர் ஓங்காரானந்தா, சுவாமி சிவயோகானந்தா உள்ளிட்ட ஆன்மிகவாதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சுவாமி ஒங்காரானந்தா கூறியதாவது: கந்தர் சஷ்டி கவசத்தை ஏன் இழிவாக பேசினர் எனத் தெரியவில்லை. கந்தர் சஷ்டி கவசத்தை பக்தியுடன் பாடுவோருக்கு மன நிம்மதி கிடைக்கும். நம் சாஸ்திரப்படி, நம் உறுப்புகள் உயர்ந்தவை. அந்த வகையில், பால் தரும் தாயின் மார்பகம் தெய்வீகம். மதங்களின் நம்பிக்கையை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். உடல், உடை கறுப்பாக இருக்கலாம். ஆனால், உள்ளம் கறுப்பாக இருக்கக் கூடாது. கந்தர் சஷ்டி கவசத்தை இழிவாக பேசியவர் மீது, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சாது மிரண்டால் காடு கொள்ளாது என புரிந்து, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: