Tuesday, October 23, 2018
Breaking News

RSS தமிழக செய்திகள்

RSS முக்கிய செய்திகள்

RSS தினகரன்: சற்றுமுன்

RSS தினகரன்

 • சிறுவர்களுக்கான கிரிக்கெட் பயிற்சி மையத்தை தொடங்க உள்ளார் சச்சின் October 22, 2018
  புனே: இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது நண்பர் வினோத் காம்ப்ளியுடன் சேர்ந்து புனேயில் சிறுவர்களுக்கான கிரிக்கெட் பயிற்சி மையத்தை தொடங்க உள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சச்சின் மாநிலங்களவை எம்.பி.யாக கடந்த 6 ஆண்டுகளாக மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், தன்னுடைய நண்பர் வினோத் காம்ப்ளியுடன் இணைந்து சிறுவர்களுக்கான கிரிக்கெட் பயிற்சி மையத்தை தொடங்க உள்ளார். இதற்காக லண்டனில் உள்ள மிடில்செஸ் கவுண்டி அணியுடன் இணைந்து பயிற்சி அகாடமியை சச்சின் […]
 • சச்சின் சாதனையை முறியடித்தார் கோஹ்லி October 22, 2018
  கவுகாத்தி: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதமடித்ததன் மூலம் இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி சர்வதேச போட்டிகளில் தனது 60-வது சதத்தை நேற்று நிறைவு செய்தார். இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 24 சதங்களும், ஒருநாள் போட்டிகளில் 36 சதங்களும் அடித்துள்ள அவருக்கு இந்த இலக்கை எட்ட 386 இன்னிங்ஸ் மட்டுமே தேவைப்பட்டது. அதில் 124 டெஸ்ட் போட்டிகள், 204 […]
 • டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போகிறார் இலங்கை வீரர் ஹெராத் October 22, 2018
  கொழும்பு: இலங்கை அணி வீரர் ரங்கனா ஹெராத் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியின் முன்னணி பந்துவீச்சாளராக திகழ்ந்து வரும் ஹெராத் 1999-ம் ஆண்டு அறிமுகமானார். இதுவரை 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 430 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் நவ.6-ம் தேதி துவங்கவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். ஹெராத்தின் இந்த முடிவு இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. ஏன்னெனில் சுழற்பந்துவீச்சில் […]
 • டென்மார்க் ஓபன் பேட்மின்டன் வெள்ளி பதக்கம் வென்றார் சாய்னா October 22, 2018
  ஓடென்ஸ்: டென்மார்க் ஓபன் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் போராடி தோற்ற இந்திய வீராங்கனை சாய்னா நெஹ்வால் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். இறுதிப் போட்டியில் சீன தைபே வீராங்கனை டாய் ட்ஸூ யிங்குடன் நேற்று மோதிய சாய்னா 13-21 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். இரண்டாவது செட்டில் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த அவர் 21-13 என்ற கணக்கில் வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது.மூன்றாவது மற்றும் கடைசி செட்டில் தொடக்கத்தில் இருந்தே […]
 • ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா October 22, 2018
  மஸ்கட்: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஆண்கள் ஹாக்கி தொடரின் லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, தென் கொரியா, ஜப்பான், ஒமான் அணிகள் ஆகிய 6 அணிகள் மோதும் இந்த தொடர், மஸ்கட்டில் நடைபெற்று வருகிகிறது. இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஒமான் அணியை 11-0 என்ற கோல் கணக்கில் பந்தாடியது. அடுத்து இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய பரபரப்பான லீக் […]
 • வலது கையில் எலும்புமுறிவு மெஸ்ஸி 3 வாரம் ஓய்வு October 22, 2018
  பார்சிலோனா: ஸ்பெயினில் நடைபெற்று வரும் லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில், செவில்லா அணிக்கு எதிராக விளையாடியபோது பார்சிலோனா அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு ஏலும்புமுறிவு ஏற்பட்டது.எதிரணி வீரர் பிராங்கோவுடன் மோதி கீழே விழுந்த மெஸ்ஸிக்கு வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவருக்கு மைதானத்திலேயே கட்டு போடப்பட்டது. பின்னர் ஸ்கேன் பரிசோதனை செய்ததில் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மெஸ்ஸி 3 வார காலம் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. செவில்லா […]
 • டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் ஸ்விடோலினா அசத்தல் October 22, 2018
  சிங்கப்பூரில் நடைபெறும் டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் தொடரின் லீக் சுற்றில், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா (6வது ரேங்க்) அபாரமாக வென்றார். செக் குடியரசின் பெத்ரா குவித்தோவாவுடன் (4வது ரேங்க்) நேற்று மோதிய ஸ்விடோலினா 6-3, 6-3 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 1 மணி, 28 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.மற்றொரு லீக் ஆட்டத்தில் கரோலினா பிளிஸ்கோவா (செக்., 7வது ரேங்க்) 6-2, 6-4 என்ற நேர் செட்களில் கரோலின் வோஸ்னியாக்கியை (டென்மார்க், […]
 • சில்லி பாயின்ட்... October 22, 2018
  * ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் 65 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார். கால் இறுதியில் அவர் மங்கோலியாவின் துல்கா துமுரை 5-3 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார்.* பாகிஸ்தான் அணி முன்னாள் வீரர் கனேரியா கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதை அடுத்து, அவர் மீதான குற்றச்சாட்டுகள் பற்றி புதிதாக விசாரணை நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் […]
 • ரோகித் ஷர்மா 152*, விராத் கோஹ்லி 140 ரன் விளாசல்.. 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி: ஹெட்மயர் சதம் வீண் October 22, 2018
  கவுகாத்தி: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. பர்சபாரா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது. இளம் வீரர் ரிஷப் பன்ட் அறிமுக வீரராக இடம் பெற்றார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஹேம்ராஜ், தாமஸ் அறிமுகமாகினர்.கியரன் பாவெல், ஹேம்ராஜ் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். ஹேம்ராஜ் 9 ரன் எடுத்து ஷமி வேகத்தில் கிளீன் போல்டானார். கியரன் பாவெல் - […]
 • மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி October 21, 2018
  கவுகாத்தி: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 326 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள்போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பரசபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மதியம் 1.30 அளவில் தொடங்கியது.  இந்த மைதானத்தில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் தொடக்க […]